https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலக்கியத் திறனாய்வு
பத்தாம் வகுப்பு
இயல் 2
நேரம் 1 மணி 40 நிமிடங்கள் மதிப்பெண் 100
1 உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர்
2 நம் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது
எது?
3 திருமந்திரத்தை எழுதியவர் ?
4 திருமந்திரத்தில் --------- உடலைப் பாதுகாத்து வாழ்நாளை
நீட்டிக்கும் என்று கூறியுள்ளது
5 வாயு வழக்கம் என்னும் பாடல் ஔவையின் குறளில் எந்த
அதிகாரத்தில் உள்ளது
6 இப்பூவுலகில் எனக்கு பல பெயர்ள் உண்டு நான் யார்?
7 நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் ----------- எனக்குப்
பெயர் சூட்டியுள்ளனர்
8 கிழக்கு என்பதற்கு ---------- பெயரும் உண்டு
9 கிழக்கிலிருந்நு வீசும் போது நான் ------- எனப்படுகிறேன்
10 கொண்டலாக நான் ---------- தருகிறேன்
11 மழைமேகங்களைச் சுமந்து வருவதால் ------ எனப்படுகிறேன்
12 மேற்கு என்பதற்குக் --------- என்னும் பெயரும் உண்டு
13 மேற்கிலிருந்து வீசும் போது நான் ------ எனப்படுகிறேன்
14 ------- நிலப்பகுதியிலிருந்நு வீசுவதால்
வெப்பகாற்றாகிறேன்
15 -------- என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு
16 வடக்கிலிருந்து வீசும்போது நான் --------- எனப்படுகிறேன்
17 காற்று பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும்
குளிர்ச்சியான --------- எனவும் அழைக்கப்படுகிறது
18 தெற்கிலிருந்நு வீசும்போது நான் --------- எனப்படுகிறேன்
19 காற்றை இளங்கோவடிகள் எவ்வாறு வருணிக்கிறார்?
20 பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது எந்த
இலக்கியத்தைச் சார்ந்தது
21 பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும்
சிற்றிலக்கியத்தை எழுதியவர்
22 பழங்காலத்தில் கடல் சார்ந்த பயணங்களில்
பாய்மரக்கப்பல்கள் -------- ஆல் இயக்கப்பட்டன
23 நளிஇரு முந்நீர் என்னும் பாடல் ------ இலக்கியத்தில்
உள்ளது
24 கி.பி முதல் நூற்றாண்டில் வீசிய பருவக்காற்றுக்கு என்ன
பெயர்
25 யவனக்கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் -----
துறைமுகத்துக்கு வந்துசென்றன
26 ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் ------- வணிகம்
பெருகிற்று
27 நளிஇரு முந்நீர் என்னும் பாடல் யாரை புகழ்ந்து
பாடியது
28 சங்க கால பெண் புலவர் காற்றை எவ்வாறு சிறப்பு
செய்திருந்தார்?
29 ----- அறிஞர் ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயனை
உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு
30 காற்று ----- மேகத்தைக் கொண்டுவந்து மழையைத் தருகிறது
31 ஜீன் முதல் செப்டம்பர் வரை வீசும் காற்றுக்கு என்ன
பெயர்?
32 அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் காற்றுக்கு என்ன
பெயர்?
33 இந்தியாவின் முதுகெலும்பு
34
இந்தியாவிற்குத் தேவையான 70 விழுக்காடு மழையளவினைத் தருவது---------
35 ------ காலங்களில் காற்று தாழ்வுமண்டலமாய்த் தவழ்ந்து
புயலாய் மாறி பறப்படும்
36 காற்றின் ஆற்றலை வளி மிகின் வலி இல்லை என்று
--------- சிறப்பித்துள்ளார்
37 கடுங்காற்று மணலைக் கொண்டு சேர்க்கிறது என்று கூறியவர்
38 காற்று ------- தந்து உயிர்கலை காக்கின்றது
39 தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுவது
-------
40 காற்று புவியின் ---------- அறுபடாதிருக்க உதவுகின்றது
41 காற்று நம் ------------- தொடர்பின் மையமாக உள்ளது
42 காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள் என்பது
---------
43 காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது
நிலக்கரியின் தேவை குறைந்து ---- பாதுகாக்கப்படுகிறது
44 உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா----- இடத்தில்
உள்ளது
45 இந்தியாவில் தமிழகம் ------- ல் உள்ளது
46 உலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில்
-------- இடம் இந்தியாவுக்கு
47 மனிதன் உணவின்றி ----------- நாள் உயிர் வாழ முடியும்
48 நீரின்றி -------- நாள் வாழ முடியும்
49 காற்றின்றி ------ நாள் வாழ முடியும்
50 இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில்
ஐந்தாம் பெறுவது ------------
51 காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி
குறைவதாக ஐக்கிய நாடுகளின் ---- தெரிவித்துள்ளது
52 ஓசோன் படலம் சூரியனிடமிருந்து வரும் ----------
தடுக்கும் அரணாக உள்ளது
53 குளோரோ புளோரோ கார்பன் ------- லிருந்து வெளிவருகிறது
54 கண்களும் தோலும் பாதிப்படையாமல் இருக்க -----
குளிர்ப்பதனியை பயன்படுத்துகிறோம்
55 அமில மழை பொழியக் காரணமான வாயுக்கள்
56 கச்சாஎண்ணெய்,நிலக்கரி ---- எரிபொருள்
57 உலக காற்று நாள் ------
58 உரைநடையும் கவிதையும் இணைந்நு யாப்புக் கட்டுரைகளுக்கு
அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் -------
59 நீடுதுயல் பாடிவந்த நிலா,சிந்துக்குத் தந்தை என்று
பாராட்டப் பெற்றவர்
60 இந்தியா,சுதேசமித்திரன் முதலிய இதழ்களின்
ஆசிரியர்-------
61 காற்றே வா -------- கவிதைத் தொகுப்பிலுள்ளது
62 முல்லைப்பாட்டு ------- நூல்களுள் ஒன்று
63 முல்லைப்பாட்டு ------ அடிகளைக் கொண்டது
64 முல்லைப்பாட்டு -------- இயற்றப்பட்டது
65 பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது
66 முல்லைப்பாட்டை எழுதியவர்
67 நப்பூதனார் யாருடைய மகன்
68 விரிச்சி பொருள்
69 முல்லை நிலத்தின் பெரும்பொழுது
70 முல்லை நிலத்தின் சிறுபொழுது
71 முல்லை நிலத்தின் மரம்
72 முல்லை நிலத்தின் நீர்
73 முல்லை நிலத்தின் பூ
74 முல்லை நிலத்தின் உரிப்பொருள்
75 புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
76 புயலிலே ஒரு தோணியின் ஆசிரியர்
77 புயலிலே ஒரு தோணியில் எந்த அத்தியாயம் பாடமாக
கொடுக்கப்பட்டுள்ளது
78 ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டத்தில் எந்த ஊரைச்
சேர்ந்தவர்
79 ப.சிங்காரம் வேலைக்காக எங்கு சென்றார்
80 ப.சிங்காரம் எந்த நாளிதழில் பணியாற்றினார்
81 சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது --------
82 கரும்பு தின்றான் என்ன தொடர்
83 தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
84 மதுரை சென்றார் என்ன தொகை
85 தேர்ப்பாகன் என்ன தொகை
86 வீசு தென்றல் என்ன தொகை
87 செங்காந்தள் என்ன தொகை
88 மார்கழித்திங்கள் என்ன தொகை
89 மலர்க்கை என்ன தொகை
90 அண்ணன் தம்பி என்ன தொகை
91 முறுக்கு மீசை வந்தார்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக