https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

 

              பத்தாம் வகுப்பு

                       இயல் 4

நேரம்:1மணி                        மதிப்பெண்:60

 

1.தமிழாக்கம் தருக: Personal computers

2.தமிழாக்கம் தருக: Digital Revolution

3.--------- நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது

4.இதழியலில்----------குறிப்பிடத்தகுந்த மாறுதல்களைச் செய்து வருகிறது

5.தமிழாக்கம் தருக:Natural Language Generation

6.வாட்சன் ------நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு

7.2016 ல் வாட்சன் எந்த நோயைக் கண்டுபிடித்தது?

8.சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்,--------பணிக்கு அமத்தியுள்ளது

9.இவ்வுலகை இதுவரை------ஆண்டுகொண்டிருக்கிறது

10.இனிமேல் இவ்வுலகை-------ஆளப்போகிறது

11.தேடுபொறிகளில் தேடிக்கிடைக்கும் விடைகளும்----------தீர்மானிப்பதைத்தான்

12.செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது--------எனலாம்

13.செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு-----தேவையில்லை

14.பெருமாள் திருமொழியை எழுதியவர் யார்?

15.பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழி?

16.பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

17.குலசேகராழ்வாரின் காலம்-------

18.வாளால் அறுத்துச் சுடினும் எத்தனையாவது பாசுர எண்?

19.அண்டப் பெருவெளியில் நம்--------போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன

20.சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள்-------தெரியும்

21.நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உண்டு என்று நிருபித்தவர் யார்?

22.எந்த ஆண்டில் நிரூபித்தார்?

23.திருவாசகத்தை எழுதியவர் யார்?

24.அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார்?

25.பரிபாடல்------நூல்களில் ஒன்று

26.விசும்பில் ஊழி என்ற பாடலை எழுதியவர் யார்?

27.பரிபாடல்-------எனும் புகழுடையது

28.பரிபாடல் சங்க நூல்களுள்-------பாடப்பட்ட நூல்

29.உரையாசிரியர்கள் இதில் எத்தனை பாடல்கள் இருப்பதாக கூறியுள்ளனர்?

30.நமக்கு கிடைத்தது எத்தனை பாடல்கள்?

31.தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,சமூக உறவு,அறிவாற்றல்,இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எதன் மூலம் அறிந்து கொள்ளலாம்?

பொருள் தருக

32.விசும்பு

33.ஊழி

34.ஊழ்

35.தண்பெயல்

36.ஆர்தருபு

37.பீடு

38.ஈண்டி

39.சுடினும்

40.மாளாத

இலக்கணக் குறிப்பு

 

41.ஊழ்ஊழ்

42.வளர்வானம்

43.செந்தீ

44.வாரா

45.பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம்-------ஆண்டு நிறுவப்பட்டது

46.கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?

47.ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள்-------என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது

48.ஆறறிவுடைய மக்களை ------என்றும்

49.மற்ற உயிரினங்களை-----என்றும் வழங்குவர்

50.-----என்பது திணையின் உட்பிரிவு

51.அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது-------ஆகும்

52.அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது---------ஆகும்

53.இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்------எனப்படும்

54.இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் --------எனப்படும்

55.என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது---------

56.வாடா ராசா,வாடா கண்ணா என்று தன்மகளைப் பார்த்துக் கூறுவது------

57.இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் எனக் கூறுவது------

58.குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் எனக் கூறுவது-----

59.குயில்------- என்பதே மரபு

60.குயில் கத்தும் என்பது --------- ஆகும்

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்