இடுகைகள்

மார்ச் 9, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

கம்பராமாயணம்

படம்
தங்களை வரவேற்கிறேன் கம்பராமாயணம் நூல் குறிப்பு கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் இராமவதாரம் ஆகும்.இது ஆறு காண்டங்களை உடையது.கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் உடையது.  ஆசிரியர் குறிப்பு கல்வியில் பெரியவர் கம்பர் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் போன்ற முதுமொழிக்களுக்கு உரியவர் கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்றவர் விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழப்பெற்றவர் சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,திருக்கை வழக்கம்.ஏரெழுபது.சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர். மனப்பாடபாடல் தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல் கண் முழவினேங்கக் குவளை கண் விழித்து நோக்கத் தென்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகளினிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ. வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோவிவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்.

திருவிளையாடற் புராணம்

படம்
தங்களை வரவேற்கிறேன்         திருவிளையாடற் புராணம் பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேசபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்தவனாக இருந்தான்.இடைக்காடனார் என்னும் புலவர் ,தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாடினான்.அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான்.இடைக்காடனார்,இறைவனிடம் முறையிட்டார்.மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக்  கோயிலை விட்டு நீங்கி,வடதிருவாயில் சென்று தங்கினார்.இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொருத்தருளுமாறு இறைவனை வேண்டி,இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.இறைவனும் கோயிலுக்குத் திரும்பினார்.                                                                 மனப்பாட பாடல் புண்ணியப் புலவர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்...

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்