https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

 தோற்றம்


ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .


       மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901  ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட்டத்துக்குரியர் எனவும் ரஷியா கருதிச் சிறப்பும் செய்த்து . ஹாலந்து நாட்டையே உலகில் முதன் முதலில் ஒலிப்பலப்பியை நிறுவி இயக்கிய நாடாகக் கருதுவர் . ரிட்டில் எனும் இங்கிலாந்து நகரில் 1929 பிப்ரவரி 14 இல் வானொலி நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக முதலில் ஒலிபரப்பப்பட்டன . 


தகவல் தொடர்பில் வானொலியின் பங்கு


      தகவல் தொடர்பு சாதனங்களுள் ஒன்றான வானொலிக்கு மற்ற சாதனங்களை விட மிகப் பெரிய பொறுப்பு ஒன்று உண்டு . கேள்வி அறிவின் மூலமே அது நேயர்களை நிறைவு செய்கிறது . ஒலிப்பரப்புத் தடைகள் , மொழித்தடைகள் போன்ற தடைகளை வானொலி சந்திக்க வேண்டியுள்ளது . மின் வழிச் சாதனங்களில் ஏழை நடுத்தர மக்களின் எளி சாதனமாக இன்றும் வானொலியே விளங்குகின்றது . கிராம மக்களின் நம்பிக்கையை அது இன்றும் பெற்றுள்ளது . வாழ்க்கைத் தேவைகளையும் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளையும் ஒருசேரத் தருகின்ற வானொலி ஒரு முன்னணிச் சாதனமாக விளங்குகின்றது . பழமைக்குப் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் வானொலி செயல்படுகிறது . 


இந்தியாவில் ஒலிபரப்பு  


   முகவுரை


1895 இல் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்தபோது இன்றைய அளவிற்கு மிகப்பெரிய தகவல் தொடர்புச் சாதனமாக மாறும் என்பதைக் கருதியிருக்கமாட்டார் . இந்திய நாட்டில் அதிகமான இடப்பரப்பினை தகவல் தொடர்பிற்காகக் கையகப்படுத்தியுள்ள தகவல் தொடர்பு சாதனம் வானொலியாகும் . கிராம மக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு தகவல் தொடர்பு முறையாக இன்றும் வானொலி இயங்கி வருகிறது . தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒரு அங்கமாக இயங்கி வரும் அகில இந்திய வனொலி இன்றைக்கு ஏறத்தாழ 173 வானொலி நிலையங்களைக் கொண்டு , தகவல் தொடர்புத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது , என்றால் அது வெறும் பேச்சன்று . 

   

இந்திய ஒலிப்பரப்பின் தோற்றம் 


                   இந்தியாவில் ஒலிப்பரப்பு 1927 ஆம் ஆண்டு துவங்கியது . பம்பாய் , கல்கத்தா நகரங்களில் தனியார் துறைக்குச் சொந்தமான இரு ஒலிப்பரப்பு சாதனங்களுடன் ஒலிப்பரப்பு  இந்தியாவில் தொடங்கியது . 1930 ல் இந்திய அரசு இவ்வொலிப்பரப்பு நிலையங்களை ஏற்று இந்திய ஒலிப்பரப்புச் சேவை என்ற பெயருடன் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத் தகவல் துறையின் கீழ் இதனை இயங்கச் செய்தது . 1936 ல் இந்திய ஒலிப்பரப்புச் சேவை என்ற பெயர் மாற்றப் பட்டு அகில ' இந்திய வானொலி ' என்ற ( 1957 முதல் இவ்வமைப்பு ஆகாஷ் வாணி என்ற பெயரையும் பெற்றது . ) பெயருடன் தனித்துறையாக இயங்கத் துவங்கியது . இந்தியா சுதந்திரம் பெறெற காலத்தில் 6 வானொலி நிலையங்களே அமைந்திருந்தன . 


அகில இந்திய வானொலி அமைப்பு முறை 


           ஒலிப்பரப்புத்துறை தகவல் தொடர்பு மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது . இவ்வமைச்சகத்தின் அரசுச் செயலாளர் இத்துறைகளின் பணிகளில் அமைச்சகத்திற்கும் ஒலிப்பரப்புத்துறைக்கும் பாலமாக விளங்குகிறார் . ஒலிப்பரப்புத் துறை தலைமை இயக்குநர் ஒருவருடையக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது . இத்தலைமை இயக்குநர்  உதவித் தலைமை இயக்குநர்கள் , இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியவர்களுடைய உதவியுடன் தனது பணியைச் சய்து வருகின்றது . இவர்கள் தவிர ஒவ்வொரு வானொலி நிலையத்திலும் அவற்றின் அளவு பணிகள் ஆகியவற்றிற்கேற்ப நிலைய இயக்குநர்கள் அல்லது துணை நிலைய இயக்குநர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எனப் பல்வேறு அலுவலர்கள் ஒலிப்பரப்பு பணியைச் செய்து வருகின்றனர் . 


மண்டலப் பாகுபாடு


     அகில இந்திய வானொலியின் அமைப்பு அதன் பணி செம்மையாக நடைபெறுவதற்கு ஏற்ப 4 மண்டலப் பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளன . இவைகள் 4 வட்டாரங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளன . அவை வடக்கு, மேற்கு , தெற்கு , கிழக்கு மண்டலம் எனப் பெயரிடப்பட்டு இப்பகுதியிலுள்ள வானொலி நிலையங்கள் இவ்வட்டாரங்களுள் அடங்கப்பட்டுள்ளன . 


அகில இந்திய வானொலியின் பல்வேறு வளர்ச்சி நிலைகளும் நிகழ்ச்சி அறிமுகமும் 


                    1927 ல் முறையான ஒலிப்பரப்பு துவங்கியதிலிருந்து அகில இந்திய வானொலி பல வளர்ச்சி நலைகளையும் பல்வேறு புதிய புதிய நிகழ்ச்சிகளின் அறிமுகத்தையும் கண்டது . துவக்கக் காலத்தில் ' இந்தியன் ஸ்டேட் பிராட் காஸ்டிங் ஸர்வீஸ் ' என அழைக்கப்பட்ட ஒலிப்பரப்பு முறை 1936 ல் 'ஆல் இந்திய ரேடியோ ' என்ற பெயரைப் பெற்றது . உலகிலேயே ஒலிப்பரப்பு முறைக்கு இத்தகைய பொருத்தமான பெயர் வேறெங்கும் இருக்க முடியாது .


இரண்டாம் உலக யுத்தமும் வானொலியும்


           இரண்டாவது உலக யுத்தம் ஒலிப்பரப்புத் துறையில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது . உள்நாட்டு வெளிநாட்டு ஒலிப்பரப்பில் சுறுசுறுப்பு ஏற்பட்டது . சக்தி மிக்க ஒலிப்பரப்பிகள் நிறுவப்பட்டன . ஒலிப்பரப்பின் எல்லை நீட்டிக்கப்பட்டது . ஒரு மைய செய்தி அறையில் இருந்து எல்லாச் செய்தியறிக்கைகளும் ஒலிப்பரப்பட்டன . போர் காலத்தில் தினந்தோறும் 27 செய்தியறிக்கைகளும் வெளியிடப்பட்டன .


80 களில் வானொலி வளர்ச்சி


                    1980 களில் வானொலி வளர்ச்சியின் எண்ணிக்கை 85 நிலையங்களாகியது . இதில் இரு வர்த்தக நிலையங்களும் அடக்கம் . இக்காலகட்டத்தில் அகில இந்திய வானொலியில் உள்யாட்டுச் சேவை 157 ஒலிப்பரப்பிகள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மணிநேரம் 77.63 % மக்களைச் சென்று அடையும் விதத்தில் ஒலிப்பரப்பப்பட்டன . இது தவிர சிறப்பு நேயருக்கான நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன . 


வினாடி வினா நிகழ்ச்சிகள்


                வினாடி வினா நிகழ்ச்சி வானொலி நிகழ்ச்சி வடிவங்களில் ஒரு முக்கியமான வடிவாக இன்றய காலக்கட்டத்தில் விளங்குகின்றது. இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை எல்லாத் தரப்பினரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக விளங்குகிறது . 


உரையாடல் , பேட்டிகள் 


         வானொலி நிகழ்ச்சிகள் உரையாடல் , பேட்டிகள் வடிவங்களிலும் அமைகின்றன . இவ்வடிவங்களும் பிரபலமான வடிவங்களாக அமைகின்றன . வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் அள்றாட பிரச்சனைகள் , நலவாழ்வுத் தேவைகள் குறித்த தலைப்பில் 30 நிமிட நேரம் கற்றுணர்ந்தோர்கள் அனுபவ அறிவுமிக்கோர் தங்களிடையே உரையாடல் போன்ற பேட்டி நிகழ்ச்சியும் இருவரிடையே அமையும் உரையாடல் அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சியாக அமையும் ஒரு வானொலி வடிவமாகும் . 


கல்வி ஒலிப்பரப்பு


                     ஊரக ஒலிப்பரப்பு மூலம் கிராமப்புறங்களுக்குப் பணியாற்றுவதில் அகில இந்திய வானொலி தனக்கென ஒரு இடத்தைப் பெறுகிறது . 1959 ல் ஊரக வானொலி மன்றங்கள் துவங்கப்பட்டன . அது போன்று 1966 முதல் வயலும் வீடும் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. பண்ணை ஒலிப்பரப்பு அகில இந்திய வானொலியின் முக்கியமானதொரு சேவை நிகழ்ச்சியாக அமைகிறது .    

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்