https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
+2 பகுபத உறுப்பிலக்கணம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சாய்ப்பான் = சாய் + ப்+ப்+ஆன்
சாய் __ பகுதி
ப் __ சந்தி
ப்__ எதிர்கால இடைநிலை
ஆன் __ படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
விம்முகின்ற = விம்மு + கின்று + அ
விம்மு --- பகுதி
கின்று --- நிகழ்கால இடைநிலை
அ --- பெயரெச்ச விகுதி
வியந்து = விய + த்(ந்) + த்+ உ
விய -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
அ -- பெயரெச்ச விகுதி
இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்
இரு -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
ஆய் -- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
உயர்ந்தோர் = உயர் + த்(ந்) + த்+ ஓர்
உயர் -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
ஓர் -- பலர் பால் வினைமுற்று விகுதி
வந்து = வா(வ) + த்(ந்) + த் +உ
வா -- தகுதி
வ எனக் குறுகியது விகாரம்
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடை நிலை
உ -- வினைச்ச விகுதி
விளங்கி = விளங்கு + இ
விளங்கு -- பகுதி
இ -- வினையெச்சவிகுதி
கலங்கி = கலங்கு + இ
கலங்கு -- பகுதி
இ -- வினையெச்ச விகுதி
தந்தனன் = தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
தா -- பகுதி
த எனக் குறுகியது
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
அன் -- சாரியை
அன் -- படர்க்கை ஆண் பால் வினைமுற்று விகுதி
பொலிந்தான் = பொலி + த்(ந்) + த் + ஆன்
பொலி -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
ஆன் -- ஆண் பால் வினைமுற்று விகுதி
நினைக்கின்ற = நினை +க் +கின்ற + அ
நினை -- பகுதி
க் -- சந்தி
கின்று -- நிகழ்கால இடைநிலை
அ -- பெயரெச்சவிகுதி
வைத்து = வை+ த் + த் + உ
வை -- பகுதி
த் -- சந்தி
த் -- இறந்தகால இடைநிலை
உ -- வினையெச்சவிகுதி
பேசுவார் = பேசு + வ் +ஆர்
பேசு -- பகுதி
வ் -- எதிர்கால இடைநிலை
ஆர் -- பலர் பால் வினைமுற்று விகுதி
கண்டான் = காண்(கண்) + ட் + ஆன்
காண் -- பகுதி
கண் எனக் குறுகியது விகாரம்
ட் -- இறந்தகால இடைநிலை
ஆன் -- ஆண் பால் வினைமுற்று விகுதி
அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்
அமர் -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
ஆன் -- ஆண்பால் வினைமுற்று விகுதி
செய்த = செய் + த் + அ
செய் -- பகுதி
த் -- இறந்தகால இடைநிலை
அ -- பெயரெச்ச விகுதி
சாற்றி = சாற்று + இ
சாற்று -- பகுதி
இ -- வினையெச்ச விகுதி
தொழுதனர் = தொழு + த் + அன் + அர்
தொழு -- பகுதி
த் -- இறந்தகால இடைநிலை
அன் -- சாரியை
அர் -- படர்க்கை பலர் பால் வினைமுற்று விகுதி
நகை = நகு + ஐ
நகு -- பகுதி
நகை ஆனது விகாரம்
ஐ -- தொழிற்பெயர் விகுதி
மருட்கை = மருள் + கை
மருள் -- பகுதி
ள் , ட் , ஆனது விகாரம்
கை -- தொழிற்பெயர் விகுதி
வெகுளி = வெகுள் + இ
வெகுள் -- பகுதி
இ -- தொழிற்பெயர் விகுதி
அறிந்து = அறி + த்(ந்) + த் + உ
அறி -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
உ -- வினையெச்ச விகுதி
அறுத்து = அறு +த் + த் + உ
அறு -- பகுதி
த் -- சந்தி
த் -- இறந்தகால இடைநிலை
உ -- வினையெச்சவிகுதி
ஈந்த = ஈ +த்(ந்) + த் + உ
ஈ -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
உ -- பெயரெச்சவிகுதி
அமர்ந்தனன் =அமர் + த்(ந்) = த் + அன் + அன்
அமர் -- பகுதி
த் -- சந்தி
ந் ஆனது விகாரம்
த் -- இறந்தகால இடைநிலை
அன் -- சாரியை
அன்-- ஆண் பால் வினைமுற்று விகுதி
தாங்கிய = தாங்கு + இ(ன்) + ய் + அ
தாங்கு -- பகுதி
இ(ன்) -- இடைநிலை
ய் -- உடம்படுமெய்
அ -- பெயரெச்சவிகுதி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக