https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
T N P S C வினா விடை 2
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- தாராபாரதியின் இயற்பெயர் இராதா கிருஷ்ணன்
- தாராபாரதியின் அடைமொழி கவிஞாயிறு
- இவர் இயற்றிய நூல்கள் 1 புதிய விடியல்கள் 2 இது எங்கள் கிழக்கு 3 விரல் நுனி
- ' புதுமைகள் செய்த தேசமிது' என்ற பாடல் தாராபாரதியின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
- தேசம் உடுத்திய நூல் எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் திருக்குறள்
- காளிதாசனின் தேனிசைப்பாடல்கள் எதிரொலிக்கும் இடம் காவிரிக்கரை
- காந்தியடிகள் எப்போது சென்னை வந்தார் 1919 பிப்ரவரி மாதம்
- ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்திய ஆண்டு 1919
- ரௌளட் சட்டம் பற்றிய கருத்தாய்வு கூட்டம் யார் வீட்டில் நடைப்பெற்றது இராஜாஜி வீட்டில்
- இராஜாஜி வீட்டில் காந்தியடிகள் அருகே அமர்ந்த கவிஞர் பாரதியார்
- யார் எழுதிய கையேடு தம்மைக் கவர்ந்ததாக காந்தியடிகள் கூறினார் ஜி.யு.போப்
- காந்தியடிகளைக் கவர்ந்தநூல் எது? திருக்குறள்
- காந்தியடிகள் தலைமை வகித்த இலக்கிய மாநாடு சென்னையில் நடைபெற்ற ஆண்டு 1937
- 1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாட்டில் வரவேற்புகுழுத் தலைவராக இருந்தவர் யார்? உ.வே.சாமிநாதர்
- காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றம் ஏற்படுத்திய ஊர்? மதுரை
- காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று கூறினார்? உ.வே.சா
- வேலுநாச்சியாரின் தந்தை பெயர் செல்லமுத்து
- வேலுநாச்சியார் அறிந்திருந்த மொழிகள் ஆங்கிலம் , பிரெஞ்சு , உருது
- வேலுநாச்சியார் கற்றுக் கொண்ட வீரச்செயல்கள் சிலம்பம் , குதிரை ஏற்றம் , வாள்போர் , வில் பயிற்சி
- வேலுநாச்சியாரின் கணவர் பெயர் முத்து வடுக நாதர்
- முத்து வடுக நாதர் எங்கு நடைபெற்ற போரில் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார் ? காளையர் கோவிலில்
- வேலுநாச்சியாரின் அமைச்சரின் பெயர் தாண்டவராயர்
- வேலுநாச்சியாரின் தளபதிகளின் பெயர் பெரிய மருது , சிறிய மருது
- மைசூரிலிருந்து யாருடைய படை திண்டுக்கல்லுக்கு வந்தது ஐதர் அலி
- வேலுநாச்சியாரின் படையில் ஆண்கள் படைக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்
- சிவகங்கைக் கோட்டையின் கதவு எந்தத் திருநாள் அன்று திறந்திருக்கும் விஜயதசமி
- வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்கும் படி ஆங்கிலேயர் வற்புறுத்திய பெண் யார் ? உடையாள்
நம் சூரியகுடும்பத்தின் ஒன்றானது சனி கோளாகும்.இக் கோளத்திற்கு 82 நிலவுகள் உள்ளது.அதில் ஒன்றுதான் டைட்டன் என்ற நிலவு.இது பார்ப்பதற்கு பூமியை போன்றே தோற்றமளிக்கிறது.இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும் , ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.
டைட்டனில் ஆறு ,குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இந்த டைட்டனில் இருக்கிறது எனவும் கூறுகின்றனர்.இதனை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
பருவ நிலைகளின் மாற்றங்கள் மற்றும் மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதை விட வெவ்வேறான பொருட்களால் நிரம்பியுள்ளன.
திரவ மீத்தேனால் ஆன நீரோடை பனிக்கட்டி மீது படிந்துள்ளது காற்றில் நைட்ரஜன் உள்ளது. இது ஹைட்ரோகார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது.
டைட்டனில் தனித்துவமான குன்றுகள் , சமவெளிகள் மற்றும் நிலபரப்புகளை உருவாக்க முடியுமென ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக புவியியலாளர் மேத்யு லபோட்ரே தலைமையிலான ஆராய்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி குறித்து புவியியலாளர் மேத்யு லபோட்ரே கூறியதாவது :
பூமியில் உள்ள குன்றுகள் சிலிகேட் பாறைகள் தாதுக்களால் உருவாகின்றன.அவை காலப்போக்கில் வண்டல் துகள்களால் அரிக்கப்பட்டு ,நிலத்தடிநீர் மற்றும் சில நேரங்களில் வெப்பத்தின் உதவியுடன் மீண்டும் பாறைகளாக மாறும்.டைட்டனில் இதே போன்ற செயல் முறைகள் தான் குன்றுகள்,சமவெளிகள் மற்றும் சமதள நிலபரப்பை உருவாக்கியது.
டைட்டனில் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந்துள்ளது.டைட்டன் எனப்படும் மாற்று உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக உள்ளன.ஆனால் அவை பூமியின் தன்மையுடன் காணப்படுகிறது என்பதை கவரும் அம்சமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக