https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1.
தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட
வடு
விளக்கம்:
ஒருவர் உடம்பில் நெருப்பினால் புண் உண்டானால் அது உடனே
ஆறிவிடும்.ஆனால் வார்த்தையினால் அவர் மனதை புண்படுத்தினால் அது என்றும் ஆறாத
தழும்பாகிவிடும்.
2.
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
விளக்கம்:
தங்களின்
மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
3. எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
விளக்கம்:
யார் என்ன சொன்னாலும் உடனே நம்வி விடக்
கூடாது.அவர்கள் சொன்னது உண்மையா பொய்யா என்பதை தீர விசாரிக்க வேண்டும்.அதுவே ஆழமான
அறிவு ஆகும்.
4. கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
விளக்கம்:
நாம் கற்க வேண்டிய நூல்களை சந்தேகம்
இல்லாமல் கற்க வேண்டும்.பின்னர் அதன்படி வாழ வேண்டும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக