https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
இலக்கணம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புணர்ச்சி விதி
செம்பரிதி = செம்மை + பரிதி
விதி 1 ஈறு போதல் _ செம் + பரிதி
வானமெல்லாம்
= வானம் + எல்லாம்
விதி 1
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு
வானமெல்லாம்
உன்னையல்லால்
= உன்னை + அல்லால்
விதி 1 இஈஐ வழி யவ்வும் உன்னை + ய் + அல்லால்
விதி
2 உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு
உன்னையல்லால்
செந்தமிழே
= செம்மை + தமிழே
விதி 1 ஈறு போதல் - செம் + தமிழே
விதி 2 முன்னினிற
மெய்திரிதல் – செந்தமிழே
ஆங்கவற்றுள்
= ஆங்கு + அவற்றுள்
- விதி 1 உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஆங்க் + அவற்றுள்
விதி
2 உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
ஆங்கவற்றுள
தனியாழி
= தனி + ஆழி
விதி 1 இ ஈ ஐ
வழி – தனி + ய் + ஆழி
விதி
2 உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
தனியாழி
விதி 1 ஈறுபோதல் வெம் + கதிர்
விதி 2 முன்னின்ற மெய்திரிதல் – வெங்கதிர்
இனநிரை
= இனம் + நிரை
விதி 1 மவ்வீறு
ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
இனநிரை
புதுப்பெயல்
= புதுமை + பெயல்
விதி 1 ஈறுபோதல்
– புது + பெயல்
விதி 2 இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் – புதுப்பெயல்
அருங்கானம்
= அருமை + கானம்
விதி 1 ஈறுபோதல்
– அருமை + கானம்
எத்திசை
= எ+திசை
விதி 1 இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் எத்திசை
உள்ளொன்று
= உள் + ஒன்று
விதி 1 தனிக்குறில்
முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
உள்ள் + ஒன்று
விதி 2 உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
உள்ளொன்று
ஒருமையுடன்
= ஒருமை + உடன்
விதி 1 இ ஈ ஐ வழி யவ்வும் – ஒருமை + ய்
+ உடன்
விதி 2 உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஒருமையுடன்
பூம்பாவாய்
= பூ + பாவாய்
விதி 1 பூப்பெயர்
முன் இனமென்மையும் தோன்றும்
பெருங்கடல்
= பெருமை + கடல்
விதி 1 ஈறுபோதல்
– பெரு + கடல்
விதி 2 இனமிகல் – பெருங்கடல்
தலைக்கோல்
= தலை + கோல்
விதி 1 இயல்பினும்
விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – தலைக்கோல்
முன்னுடை
= முன் + உடை
விதி 1 தனிக்குறில்
முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
முன்ன் + உடை
விதி 2 உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
முன்னுடை
ஏழையென
= ஏழை + என
விதி 1 இஈஐ வழி
யவ்வும் – ஏழை + ய் + என
விதி 2 உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
ஏழையென
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக