https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
ஆயக்கலைகள் அறுபத்து நான்கு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
“ஆய கலைகள் அறுபத்து
நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னமை – தூய
உருப்பளிங்கு
போல்வாள் என
இருப்பளிங்கு வாராது இடர்”
என்று வணக்கப் பாடலில் பாடுயுள்ளார்
திருமூலர்.அவர் திருமந்திரத்தில்
பத்தும் இரண்டும் பகலோன்
உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை
வான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு
உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து
கொள்வீரே...
எட்டெட்டு கலைகள் என்றால் அறுபத்து
நான்கு கலைகள் என்று குறிக்கின்றார் திருமூலர்.முத்தமிழின் ஒரு பிரிவான இயற்றமிழின்
வழி ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும்.
அறுபத்து நான்கு கலைகளையும் மொழிஞாயிறு
தேவநேயப் பாவணார் செந்தமிழ் சொற்பிறப்பியல் என்னும் பேரகரமுதலியில் தொகுத்துள்ளார்.
பக்கம் 545 – 548 ல் உள்ளபடி
1. எழுத்திலக்கணம்
2. எழுத்தாற்றல்
3. கணிதம்
4. மறைநூல்
5. தொன்மம்(புராணம்)
6. இலக்கணம்
7. நயனூல்(நீதி சாத்திரம்)
8. கணியம்(சோதிட சாத்திரம்)
9. அறநூல்
10. ஓகநூல்(யோக சாத்திரம்)
11. மந்திர நூல்
12. நிமித்த நூல்
13. கம்மிய நூல்
14. மருத்துவ நூல்
15. உறுப்பமைவு நூல்
16. மறவனப்பு
17. வனப்பு
18. அணிநூல்
19. மதுரமொழிவு
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ்
24. குழல்
25. மதங்கம்
26. தாளம்
27. விற்பயிற்சி
28. பொன் நோட்டம்
29. தேர்ப்பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணி நோட்டம்
33. நிலத்து நால்
34. போர்ப்பயிற்சி
35. மல்லம்
36. கவர்ச்சி
37. ஓட்டுகை
38. நட்புப் பிரிப்பு
39. காம நூல்
40. மயக்கு நூல்
41. வசியம்
42. இதளியம்
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர் மொழியறிகை
45. மகிழுறுத்தம்
46. நாடிப்பயிற்சி
47. கழுலம் ( காருடம் )
48. இழப்பறிகை ( நட்டம் )
49. மறைத்ததையறிதல்
50. வான்புகவு
51. வான்செலவு
52. கூடுவிட்டு கூடுபாய்தல்
53. தன்னுருக் கரத்தல்
54. மாயச்செய்கை
55. பெருமாயச்செய்கை
56. அழற்கட்டு
57. நீர்க்கட்டு
58. வளிக்கட்டு
59. கண்கட்டு
60. நாவுக்கட்டு
61. விந்துக்கட்டு
62. புதையற்கட்டு
63. வாட்கட்டு
64. சூனியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக