https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
சங்க இலக்கியம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை ஆகிய இரு தொகை நூற்களும் சங்க இலக்கியங்கள்
எனப்படும்,சங்கப் பாடல்களில் நீண்ட பாடல்களில் பத்தின் தொகுதி பத்துப்பாட்டு ஆகும்.கி.பி
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் பத்துப்பாட்டு என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.14
ஆம் நூற்றாண்டவரான மயிலைநாதரே முதலில் பத்துப்பாட்டு என்ற தொடரைக் குறிக்கிறார்.எனவே
கி.பி 12-14 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் பத்துப்பாட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பர்.
பத்துபாட்டு
என்றும் பெயர் நிலைத்து விட்ட பிறகு அதற்கு இலக்கணமும் வகுக்கப்பட்டது.பன்னிருபாட்டியல்
என்னும் இலக்கண நூல் பத்துப்பாட்டின் இலக்கணத்தை
நூறடிச் சிறுமை நூற்றிப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈரைம்
பாட்டுத்
தொடுப்பது பத்துப்
பாட்டெனப் படுமே
என்றும் கூறுகிறது.பத்துப்பாட்டு நூற்களின் பட்டியலை பழைய வெண்பா
முருகு பொருநாறு
பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக்
காஞ்சி மருவினிய
கோல நெடுநல்
வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும்
பத்து
எனக் கூறுகிறது.
எட்டுத்தொகை
எட்டுத்தொகை நூற்களைக் குறித்த பழைய வெண்பா ஒன்று[i]
நற்றினை நல்ல
குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து
ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார்
ஏத்தும் கலியே எகு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்
தொகை
எனக் குறிப்பிடுகிறது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக