https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

இலக்கியத் திறனறித் தேர்வு 6

 

இலக்கியத் திறனறித் தேர்வு 7,8,9

1.சிற்றகல் ஒளி எழுதியவர்

2.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக்க் கருதப்படுகிறது

3.வ.உ.சி ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு

4.காந்தியடிகள் சத்தியாகிரகத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு

5.அந்நியத் துணிக்கடை மறியல்,----------ஒப்பந்தபடி அனுமதிக்கப்படவில்லை

6.இளங்கொ தந்த சிலம்பு யாருடைய பொதுச் சொத்து

7.இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக் கட்சி எந்த ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றியது

8.கன்னியா குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது எந்த ஆண்டு

9.ம.போ.சிவஞானம் எவ்வாறு போற்றப்படுகிறார்

10.ம.போ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராக எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பணியாற்றினார்

11.இவர் எந்த நூலுக்காக சாகித்திய அகாடாமி விருது பெற்றார்

12.ஏர் புதிதா? எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது

13.கு.ப.ராஜகோபாலன் 1902 ல் எங்கு பிறந்தார்

14.திபாலர் எத்தனை பேர்

15.நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செயாயுள் எனக் கூறியவர்

16நோபல் பரிசுக்கு இணையாக இசைக்கு வழங்கும் விருது

17.தாமரைச் செவ்வணி விருது பெற்றவர் யார்?

18 சாகித்திய அகாடாமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்?

19.கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு வாழ்வுரிமை விருதை வழங்கிய நாடு

20.மண்ணைக் கவர்தல் எந்த திணை

21.கோட்டையைக் காத்தல் எந்த திணை

22.போர்ல் வெற்றி பெற்றதும் சூடும் பூ எது

23.சங்ககாலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை--------என்பர்

24.கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்

25.உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் என்னும் பரிபாடல் அடி கூறும் ஊழிக் காலத்தின் முதல் பூதம்

26.பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் -----இக்குறட்பாவில் பயின்று வரும் அணி

27.காற்று மாசு அடைய காரணம் அல்லாத்து எது

28.குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறையக் காரணமாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கூறுவது

29.ஓசோன் படலத்தை சிதைப்பது

30.தலைமுறைக்கு ஒரு முறை மலர்வது

31.இருவர் உரையாடுவது போன்ற ஓசை

32.ஜெயகாந்த நூல்களுள் ஒன்று

33.ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்

34.வளவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு படைக்கப்பட்ட நூலினைப் படைத்தவர்

35.தேம்பாவனி நூலை இயற்றியவர்

36.ஞானம் எந்த கவிதைத் தொகுப்பில் உள்ளது

37 தி.சொ.வேணுகோபாலனனின் மற்றொரு கவிதைத் தொகுப்பு

38 கண்ணதாசனின் இயற்பெயர்

39.கண்ணதாசன் எந்த புதினத்திற்காக சாகித்திய அகாடாமி விருது பெற்றார்

40.அறம் கூறும்,குறளும்,நாலடியாரும் ------------- அமைந்துள்ளன

41.அகவல் ஓசை------------க்கு உரியது

சொல்லும் பொருளும்

42.இளங்கூழ்

43.தயங்கி

44.கொம்பு

45.கான்

46.அசும்பு

47.உவமணி

48.படலை

49.கடிந்து

50.துணர்

51.தேம்பாவனி எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது

52.வீரமாமுனிவரின் இயற்பெயர்

53.ஒருவன் இருக்கிறான் எழுதியவர்

இலக்கணக் குறிப்பு

54.காக்கென்று

55.கணீர்

56.உய்முறை

57.மெய்முறை

58.கைமுறை

59.இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லுக்கு பொருள்

60.வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்