https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

தொகைச் சொற்கள்

 

தொகைச் சொற்கள்

1.       இருமை    ------  இம்மை,மறுமை

2.       இருவினை      நல்வினை,தீவினை

3.       இருதிணை      உயர்திணை,அஃறிணை

4.       இருசுடர்        ஞாயிறு,திங்கள்

5.       ஈரெச்சம்        வினையெச்சம்,பெயரெச்சம்

6.       மூவிடம்        தன்மை,பன்மை,படர்க்கை

7.       முந்நீர்          ஆற்றுநீர்,ஊற்றுநீர்,மழைநீர்

8.       முப்பால்        அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால்

9.       முத்தமிழ்       இயல்,இசை,நாடகம்

10.    முக்காலம்      இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்

11.    மூவேந்தர்       சேரன்,சோழன்,பாண்டியன்

12.    முக்கனி         மா,பலா,வாழை

13.    நான்மறை       ரிக்,யசூர்,சாம,அதர்வணம்

14.    நாற்குணம்       அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு

15.    நாற்படை        தேர்,யானை,குதிரை,காலாள்

16.    நாற்றிசை         கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு

17.    நானிலம்         குறிஞ்சி,முல்லை,நெய்தல்,மருதம்

18.    நாற்பால்          அரசர்,அந்தணர்,வணிகர்,வேளாளர்

19.    ஐம்பால்           ஆண்பால்,பெண்பால்,பலர்பால்,ஒன்றன்பால்,பலவின் பால்

20.    ஐம்பூதம்           நீர்,நிலம்,காற்று,வானம்,தீ

21.    ஐந்திலக்கணம்      எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி

22.    ஐந்தினை           குறிஞ்சி,நெய்தல்,மருதம்,முல்லை,பாலை

23.    ஐம்பொறிகள்            மெய்,நாக்கு,மூக்கு,கண்,காது

24.    அறுசுவை           இனிப்பு,கசப்பு,புளிப்பு,உவரப்பு,துவர்ப்பு,கார்ப்பு

25.    ஏழு வள்ளல்கள்      பாரி,காரி,ஓரி,ஆய்,பேகன்,அதியன்,நள்ளி

26.    மலரின் 7 பருவங்கள் அரும்பு,மொட்டு,முகை,மலர்,அலர்,வீ,செம்மல்

27.    நவரத்தினங்கள்       கோமேதகம்,நீலம்,பவளம்,புஷ்பராகம்,மரகதம்,மாணிக்கம்,முத்து,வைரம்,வைடூரியம்

 

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்