https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

நாயன்மார்கள்

 

          

 
நாயன்மார்கள்

  தமிழ் இலக்கியங்களில் நாயன்மார்களை பற்றி சொல்லும் பெரிய புராணத்துக்கு தனி சிறப்பு உண்டு.அது வரலாற்றைக் கூறுவதால் இதிகாசம் என்றும் சொல்வதுண்டு.நாயன்மார்களைப் பற்றி கூறி கவிச்வையும் பக்திரசமும் ததும்ப உரைக்கிறது.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை,

      “ பக்திச் சுவைதனி சொட்டச் சொட்டப்

            பாடிய கவிவலவ’’

என்று பாராட்டுகிறார்.

  சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர்.ஒரு ஆண்டு பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.அரங்கேற்ற முடிவில் மன்னன் சேக்கிழாரை வணங்கி,யானையின் மேல் ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்தான்.

   பெரிய புராணம் தமிழில் உருவான நூல்.இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியவுடன் சைவ சமயம் பரவியது.இது சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்.படிப்பவருக்கு அமைதியும் பண்பையும் உண்டாக்கும் நூல்.

  

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்