https://nainthamizh.blogspot.com/p/contact-us.html
திருநீலகண்ட நாயனார்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருநீலகண்ட நாயனார்
தில்லை மாநகரில்
இறைவனுடைய அடியார்களிடம் தொண்டுகள் செய்து வாழ்ந்து வந்தார்.அடியார்க்கு உணவு உண்ணும்
திருவோடுகளைச் செய்து அடியார்களுக்கு வழங்கும் சிறந்த தொண்டினை செய்து வந்தார்.
இவ்வளவு பெரிய பக்தர் இளமையின் மிடுக்கால் புறத்தொழுக்கம் உடையவராகி
இருந்தமையால் அவருடைய மனைவி ஒரு நாள் “தன்னைத் தீண்டக்கூடாது திருநீலகண்டத்தின் மேல்
ஆணை’’ என்று கூறினார்.இதைக் கேட்ட நாயனார்,தவறை உணர்ந்து,இரங்கினார்.இனி நான் உன்னைத்
தீண்டுவத்ல்லை என்று ஆணை கூறி காம இன்பத்தைத் துறந்து வாழ்ந்தார்.
இல்லற வாழ்க்கையில் மற்ற அறம் ஏதும் தடையின்றி நடைபெற இருவரும் இன்பம்
துய்க்காமல் வாழ்ந்தார்கள்.இது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது.
இறைவன் வெளி உலகத்துக்கு வெளிப்படுத்த நினைத்தார்.அடியார் போன்று உருமாறி
ஓடு ஏந்தி திருநீகண்டரிடம் வந்தார்.அவரை வரவேற்று தேவையான தொண்டுகளை செய்தார்.அடியாரை
போல வந்த இறைவன்தன் ஓட்டினைக் காட்டி , இது கிடைப்பதற்கு அரியது,விலை மதிப்பில்லாதது,மூவுலகிலும்
இல்லாதது,இதை பத்திரமாக வைத்துகு கொள்ளும்,கேட்கும் போது தந்தால் போதும் என்று கூறினார்.நாயனார்
அப்பனியே செய்வதாகச் சொல்லி அதை வாங்கி பத்திரமாக ஓரிடத்தில் வைத்தார்.
சில நாட்கள் சென்ற பின்பு இறைவன் தான் தந்த ஓட்டை திரும்பத் தரும்படி
கேட்டார்.நாயனார் சென்று வைத்த இடத்தில் பார்க்கும் போது அது அங்கில்லை.வேறு இடத்திலும்
தேடினார்.எங்கு தேடியும் இல்லை.இறைவனிடம் வந்து அந்த ஓட்டை காணவில்லை தான் அதை விட
வேறு ஒரு சிறந்த ஓட்டைத் தருவதாக கூறினார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை.எனக்கு அந்த
ஓடு தான் வேண்டும் என்று கூறினார். அது எவ்வளவு முக்கியமான ஓடு என்று கூறியும் நீ வேண்டுமென்றே
அதைக் கெட்டு போகச் செய்து விட்டாய் என்று கூறினார்.
நாயனார் இல்லை நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றார்.உடனே அடியார்
அப்படியென்றால் வேண்டுமென்றே செய்யவில்லை என்று சத்தியம் செய்து கொடு என்றார்.
இறைவன் நீ என்ஓட்டைத் திருடவில்லையென்றால்
உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து கொடு என்றார்.இது நாயனார்க்கு
தர்ம சங்கடமான நிலையாயிற்று.தன் மனைவியைத் தொடுவதில்லை என்பதை வெளியில் சொல்வதா என
யோசித்தார்.இறுதியில் சத்தியம் செய்வதில்லை என்றார்.
நீ வேண்டுமென்றே எடுத்து வைத்துக் கொண்டாய். நான் தில்லை வாழ் அந்தணர்களிடம்
முறையிடுவேன் என்றார்.அவையில் திருநீலகண்டா
நீ எடுக்கவில்லை என்றால் உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம்
செய்ய வேண்டியதுதானே என்றனர். வேறு வழியின்றி மனைவியைத் தீண்டுவதில்லை என்ற உண்மையைக்
கூறி குளத்தில் மூழ்கி எந்தித்தார்.உடனே அவரது முதுமை நீங்கி இருவரும் இளமையாயினர்.அங்கிருந்தவர்கள்
ஆச்சரியமாகப் பார்த்தனர்.இறைவன் தனது கோலத்தை மாற்றி எழுந்தருளிக் காட்சிக் கொடுத்தான்.
பின்பு நாயனாரும் அவரது மனைவியும் இளமை நீங்காமல் பல காலம் இவ்வுலகில்
வாழ்ந்து அப்பால் இறைவனுடைய திருவருளைப் பெற்றுப் பேரின்ப வாழ்வை அடைந்தார்கள்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக