https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு



முன்னுரை

 போதை

 அது அழிவின்

 பாதை

 போதை சமுதாயத்திற்கும் உடல் நலத்திற்கும் எதிராக உலகளவில் பெரிதாக எழுந்திருக்கும் பிரச்சனை.போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது இன்று வயது வரம்பின்றி சமுதாயத்தில் வேருன்றியுள்ளது.

 போதை பழக்கம் ஏற்பட காரணங்கள் 

மாணவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் ஏற்படும் அழுத்தத்தினாலும் தாம் வசிக்கும் சூழலினாலும் திரைப்பிரபலங்கள் போன்றவர்களை பார்த்து பழகுதல் தன் விருப்பம் தற்காலிக மகிழ்ச்சி தவறான நட்பு போன்ற காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது.

 உலக போதை ஒழிப்பு தினம்

 ஆண்டுதோறும் ஜுன் 26 ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 இச்சட்டம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிது. 

போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

 உடல் நலம் குறைதல்

 நீண்ட நேரம் வேலை செய்தல் 

அனைத்தையும் இழத்தல்

 பெற்றோர்களின் அன்பு குறைதல்

 சொந்த வேலைகளை புறக்கணித்தல்

 புற்றுநோய்கள் ஏற்படுதல்

 குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கப்படுதல்

 போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வழிமுறைகள்

 போதைப்பழக்கத்திலிருந்து விடுபட தன்னம்பிக்கையுடன் இருத்தல்

 மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல்

 மறுவாழ்வு மையங்களுடன் முறையான சிகிச்சை பெறுதல்

 போதைப்பொருள் தடுப்புச்சட்டம்

 போதை தடுப்புச்சட்டம் 1985-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மரண தண்டனை சட்டப்பிரிவு 31 ஏ கொண்டு வர வழி செய்யப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை.

 அரசின் கடமை

 மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு போதைப்பொருள்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.சட்டத்திற்கு விரோதமாக போதைப்பொருள் கடத்துவோர்,பயன்படுத்துவோர்க்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.அரசு நடத்தும் மது கடைகளை மூட வேண்டும்.போதைப் பொருள் பயன்படுத்தியதால் சீர் கெட்ட குடும்பங்களுக்கு தேவையான வாழ்வு ஆதாரங்களை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை ஆகும்.உலகளவில் போதைப் பொருளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

குடிமக்களின் கடமை 

அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாதவர்கள் கையிலெடுக்கும் பழக்கம் தான் தோதைப் பழக்கம் .தனி மனித ஒழுக்கமே சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்.இளைஞர்கள் நாளைய சமூகத்தின் முன்னோடிகள் .அவர்கள் போதைப் பொருள் ஒழிப்பதில் வீரியமாகச் செயல்பட வேண்டும். விஷம் அருந்துவதற் யாரும் முன் வர மாட்டார்கள்.அதே போன்று போதைப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.

 முடிவுரை

 நாட்டிற்கும் , வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் போதைப் பொருளின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுமையாக தடுக்க வேண்டும்.

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்