https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

குறுந்தொகையில் தோழி

 முன்னுரை


          குறுந்தொகையில் தோழி அக இலக்கிய முக்கோண வடிவத்தின் மேல் முனையாக விளங்குகிறாள். அவள் தலைவன், தலைவி என்ற இரு கரைகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறாள்.களவுலகக் கடலில் தலைவியின் நெஞ்ச மரக்கலம் இடையூறு பாறைகளின் இடையில் தடுமாறும் போது வடதுருவ விண்மீனாக விளங்கி வழிகாட்டுகிறாள் . தலைவனின் நெஞ்சம் மயக்க இருளிலும் , தளர்ச்சி மூடு பனியிலும் சிக்கித் தவிக்கும் போது , அறிவுத் தீச்சுடராக அவள் உதவுகிறாள் . செவிலி சடங்குச் சேற்றில் நழுவும் போது திடப்படுத்தும் ஊன்றுகோலாகத் தோன்றுகிறாள் . 


தலைவியின் கண்ணில் கண்ணீர் , தோழியின் கண்ணில் செந்நீர் 


    தலைவியின் துன்பமே தன் துன்பமாக நினைக்கும் தோழியின் உள்ளமும் , தோழி துன்பத்தைத்  தன் துன்பமாக நினைக்கும் தலைவியின் உள்ளமும் புலப்படுத்தும் முறையில் இருவரின் நட்புச் சிறப்பு அமைந்துள்ளது . தலைவன் வரைவு மேற்கொள்ளா நிலையில் தலைவியின் துயரம் கண்டு தோழி துடிக்கிறாள் . தலைவியின் மேனி மாற்றம் கண்டு தோழி ஆற்றாதவளாகிறாள்.தலைவியுடன் சேர்ந்து இவளும் அழுகிறாள்.தலைவியின் நோய்க்கு மருந்தாக முடியவில்லையே என்று பேதுறுகிறாள் . 

                        


                              '' இனமீனிருங்குழி  நீந்தி நீதின் 

                                  நயனுடை மையின் வருதியிவடன்

                                   மடனுடை மையினுங்கும் யானது

                                    கசை மிக நஞ்சுண்டா அங்

                                    கஞ்சுவல் பெரும வெண் எனஞ்சத்தானே ''

என்னும் பாடலில் இருந்து தலைவியின் தூய்மை உணர்வையும் , அன்புடைமையையும் அறிய முடிகிறது . உறங்காத தலைவிக்குக் கங்குலில் உயவுத் துணையாக துஞ்சாதிருந்து ஆறுதல் தருகிறாள்  . பேய்க் கொண்டனள் தலைவியென்று தாய் வெறியெடுப்பது கண்டு வருந்துகிறாள் . ஆற்றாது துடிக்கும் தலைவியின் நிலை கண்டு 

                    

                                 '' கேள்வி யந்தனர் கடவும்

                                   வேள்வி ஆவியின் ''

உயிர்க்கிறது தோழியின் நெஞ்சம் தோழி வருந்தும் படி நோய் செய்த தானே தவறுடையர் என்று தலைவி நோகுமளவிற்குத் தோழி துயருகிறாள் . தலைவியின் துயர் கண்டு வருந்தும் தோழியைத் தலைவியே ஆற்றுவிப்பதும் நிகழ்கிறது .

  பொது நிலை


      தலைவனின் வருகையில் தலைவியும் தோழியும் அடைந்த மகிழ்ச்சி கூறப்படுகிறது . தலைவன் வாழ்த்தவும் பெறுகிறான் . தலைவன்  '' நன்காற்றுவித்தாய் '' என்று நன்றி  கூறும் போது அதை ஏற்காமல் காக்கைக்குக் நன்றி கூறும்படி கூறும்படி கூறுகிறாள் .


                         '' திண்டோர் தள்ளி காணத் தண்டர்

                             பல்லா பயந்த நெய்யிற் றொண்டி

                             முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சாசோ

                             றெழுகலத் தேந்தினுஞ் 

                             பெருந் தோ ணெகிழ்த்த செல்லற்கு

                             விருந்து வரக் வரக் கரைத்த காக்கையது பலியே ''


என்னும் நற்தொகை பாடலில் புகழுக்காக நாணும் தோழியின் பெருந்தன்மை புலப்படுத்துகின்றன . வதுவை நடக்கும் கால்தும் தலைவன் பள்ளியடத்திருந்துழியும் தலைவனை வாயார நெஞ்சும் குளிர வாழ்துகிறாள் தோழி .


தலைவியின் ஆற்றாமை


               தலைவியின் வருத்தத்தைப் பொதுவாக்க் கூறி வரைவு வேண்டப்படுகிறது . தலைவியின் துன்பங்களையெல்லாம் கூறி இத்துன்பங்களுக்குக் காரணம் தலைவன் வரைவு மேற்கொள்ளாமையே என்று அறிவுறித்தித் துன்பத்தைக் களைக என வேண்டும் முறை இந்நிலையில் அமைகிறது . 


          தலைவியின் காம மிகுதி கூறி அவள் காமம் தணிய வரைவு தூண்டுதல் அடுத்த நிலையில் அமைகிறது . சிறுகோட்டில் பெரும்பழம் தொங்குவது போல அவள் உயிர் சிறியதாகவும்  

காமம் அதிகமானாலும் தலைவனிடத்துத் தலைவியும் தோழியும் கொண்ட தொடர்பு தேயாது எனக் கூறித் தலைவனின் வரைவைத் தடுக்கும் முயற்சியும் அமைகின்றது. 


                     '' வேரல் வேலி வேர்கோட் பலவின்

                         சாரனாட செவ்வியை யாகுமதி

                          யாரஃதறிந்திசி னோரே சாரற்

                           சிறு கோட்டுப் பெரு பழம் தூங்கியாங்கிவள்

                           உயிர் தவச்சிறிது காம மோ பெரிதே ''

என்று தலைவியின் ஆற்றாமையைக் கூறி வரைவுக் கடாவுகிறாள் தோழி . 


தோழி அறத்தோடு நிற்றல்


                  தலைவி தலைவன் மீது கொண்ட காதல் நோயினால் உடல் மெலிகிறாள் . காரணம் அறியாத செவிலித்தாய் முதலியோர் தலைவியின் வேறுபாட்டிற்கான காரணத்தை அறியுமாறு குறத்தியிடம் குறிக் கேட்க , அவள் அவள் தலைவனின் மலை நிலைத்தச் சேர்ந்தவளாதலால் மலையைப் புகழ்ந்து பாடத் தோழி அவளிடம் நீ தலைவனின் மலையை இன்னும் இன்னும் பாடுவாயாக என்று கூறித் தலைவியின் துயருக்குக் காரணம் அவள் தலைவன் மீது கொண்ட காதலே எனக் குறிப்பால் வெளிப்படுத்தி அறத்தோடு நிற்கிறாள் . 


                     '' அகவன் மகளே அகவன் மகளே

                        மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங்கூந்தல்

                       அகவன் மகளே பாடுக பாட்டே

                        இன்னும் பாடுக பாட்டே அவர்

                        நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே ''


என்று தோழி அறத்தோடு நிற்கிறாள் . 


பேதைமையுடைய  அன்புத்  தோழி


               மழையால் இயற்கை கோலம் கொள்கிறது . மயில் ஆடுகிறது . கொன்றையும் , கோடலும் , பிடவமும் பூக்கின்றன . இக்காட்சி தலைவியின் உள்ளத்தை வருத்துகின்றது . இயற்கை பொய்க்காது என்பதை நன்கு அறிந்த தோழி தலைவிக்காக இயற்கையையும் பொய்யாக்குகிறாள் . இது மழைக் காலத்தில் பெய்யும் மழை அல்ல . இனிவரும் கார் காலத்திற்கு வேண்டிய புதிய நீரை முகந்து கொள்ளும் பொருட்டுச் சென்ற கார் காலத்தில் எஞ்சிய மழை நீரைப் பெய்கிறது.அறிவில்லாது மழை பொழிகிறது. அதிர் குரலில் பொய்யிடி இடிக்கிறது . அவர் வாராமையால் , இப்பருவ மழை வம்ப மழையே தவிர நம்பும் மழையல்ல என நிறுவுகிறாள் . தோழி மழை என நினைத்து மகிழும் மயிலும் , மலரும் பிடவு , கொன்றை , கோடல் ஆகிய மலர்களும் அறியாமையுடையன . அதனால் தான் வம்ப மாரியைக் காரென நினைத்து விட்டன . அம்மலர்களைப் போன்று நாம் மடவரா , என வினவி ஆற்றுவிக்கிறாள் . 


                          '' மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

                             கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய

                             கொம்புசேர் கொனியிண்டூழ்ந்த

                             வம்ப மாரியைக் காரென மதித்தே ''


என்னும் பாடலில் மூலம் தலைவனுக்காக தலைவிக்காக இயற்கையே மடவதாகப் பேதைமையுடையதாக மாற்றி விடுகிறாள் அன்புடைத்தோழி . 


தோழி வாயில் மறுத்தல்


     தலைவன் பரத்தமை காரணமாகத் தலைவி ஊடியிருந்தாளாகத் தலைவன் வாயிலாக வந்த பாண்ணுக்குத் தலைவனின் கற்றம் சாட்டித் தோழி வாயில் மறுத்தல் ஊரினுள் வாழும் ஊர்குருவியன் துள்ளு நடையுடைய ஆண்பறவை கர்ப்பம் முதிர்ந்த தன் பெண் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக கூடு கட்டும் பொருட்டு தேன் பொதிந்த தலையையுடைய இனிய கழையாகிய கரும்பின் மனம் இல்லாத வெள்ளிய பூவை அலகால் கோதி நிற்கும் புது வருவாயையுடைய ஊருக்குத் தலைவனுடைய பாணனின் சொல் மூலம் எல்லாரையும் விட மிகுந்த இனிமையும் அன்பும் அற்றவன் ஆவான் . 


                    '' யாரினும் இனியன் பேரன் பின்னே

                       உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச்சேவல்

                       சூல் முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்

                      தேம் பொதிக் கொண்ட திங்கழைக் கரும்பின்

                      யாணர் ஊரன் பாணன் வாயே ''


எனும் பாடலில் தோழி வாயில் மறுக்கிறாள்.


தோழி நற்றாயை வாழ்த்தித் தலைவிக்குக் கூறியது


          தமக்குரிய இல்லில் இருந்து தாம் ஈட்டிய பொருளை பிறர்க்குப் பகிர்தளித்துத் தமக்குரியதை தாம் உண்ணும் ஒருவருடைய இன்பத்தைப் போன்று இன்பம் உடையதும் கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்கள் செறிந்த உயர்ந்த மலையும் உடைய நாட்டின் தலைவன் வரைந்து கொள்ளும் முயற்சியோடு வருவான் என்று கூறிய அன்னை பெறுதற்குரிய அமுதத்தை உண்ணுதற்குரிய பெரும்புகழையுடைய உலகத்தைப் பெறுவாளாக


                       '' அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்

                          பெரும் பெயர் உலகம் பெறீ இபரோ அன்னை

                          தம் இல் தமது உண்ட அன்ன சினைதொறும்

                         தீம் பழம் தூங்கும் பலவின்

                        ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே ''


எனும் பாடல் தலைவன் வரைந்து கொள்வான் எனபதைச் செவிலி தோழிக்குக் கூறியபின் தோழி நற்றாயை வாழ்த்தித் தலைவிக்குக் கூறுகிறாள் . 


முடிவுரை


      '' தோழி தானே செவிலி மகளே '' என்பது தொல்காப்பியம் தரும் குறிப்பு ஆகும் . அவள் தலைவிக்காகவே , தலைவியின் காதல் வெற்றிக்காகவே , படைக்கப்பட்ட பாத்திரமாக காணப்படுகிறாள். தலிவியின் விளையாட்டுப் பருவத்திலிருந்து தலைவி மகப்பேறு பெற்ற நிலையில் செவிலியாக மாறும் வரை தன் தலைவிக்காகவே அவள் வாழ்கிறாள் . 

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்